Start Your Eating From Sweet
Eat After Wash hand and Leg
When eat Don't Drink Water
Avoid Non Veg After 45 Years
Brush Morning and Night
1. இனிப்பை
முதலில் சாப்பிட வேண்டும் .
2. உணவு,
தண்ணீர் எதுவானாலும் ரசித்து, சுவைத்துச் சாப்பிட வேண்டும்.
3. ஆறு
சுவைகளையும் உணவில் முடிந்தவரை சேர்த்துக்
கொள்ளவேண்டும்
4. உணவை
மென்று கூழாக்கி எச்சில் நன்றாகக் கலந்து
சாப்பிடவேண்டும். (நொறுங்கத் தின்றால் நூறு வயது வரை
வாழலாம். உமிழ்நீர், வெள்ளை அணுக்களுக்கு இணையாகப்
பணியாற்றக் கூடிய உமிழ் நீர்
கலந்த உணவு நன்கு செரிமானமாகும்)
5. உண்ணும்போது
உதட்டை மூடி வாயில் காற்று
புகாமல் மென்று சாப்பிட வேண்டும்.
வாயைத் திறந்து சாப்பிடுவது உமிழ்நீர்
சுரப்பதை தடுத்து செரிமானத்தை பாதிக்கும்.
6. சாப்பிடும்
போது சாப்பாட்டில் கவனத்தை வைக்க வேண்டும்.
நம் பார்வையும் கவனமும் வேறு எங்கும்
இல்லாமல் உணவை உற்று நோக்கி
சாப்பிடவேண்டும்.
7. உணவை
கையால் எடுத்து சாப்பிடவேண்டும். நம்
கை உணவில் படுவது மிகவும்
நல்லது.
8. சாப்பிடும்முன்
30 நிமிடமும், சாப்பிடும்போதும், சாப்பிட்டபின் 30 நிமிடமும் தண்ணீர் குடிக்கக் கூடாது.
(தேவைப்பட்டால், தொண்டையை நனைக்கும்படி சிறிது குடிக்கலாம். தண்ணீர்
குடிப்பது செரிமானத்திற்காக உற்பத்தியாகும் அமிலத்தை நீர்த்து தீங்கை ஏற்படுத்தும்)
9. தொலைக்காட்சி
பார்த்துக்கொண்டு, புத்தகம் வாசித்துக்கொண்டு, யாருடனாவது பேசிக்கொண்டே சாப்பிடக்கூடாது.
10. சம்மணமிட்டு சாப்பிட
வேண்டும் .இது உடலில் பரவும்
சக்தியை வயிற்றுப் பகுதியில் தடுத்து, தேக்கி செரிமானத்திற்கு உதவும்.
காலைத்தொங்கவிட்டு நாற்காலியில் அமர்ந்து உண்பது நல்லதல்ல.
12. உணவு உண்ணும்போது
மன உளைச்சல், சண்டை, கோபம் போன்ற
உணர்ச்சிகள் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
13. கை கால்
முகம் கழுவிச் சாப்பிட வேண்டும்
.
14. குளித்தபின் 45 நிமிடம்
சாப்பிடக் கூடாது . சாப்பிட்டபின் 2.5 மணி நேரம் குளிக்கக்
கூடாது
15. அளவு சாப்பாட்டைத்
தவிர்த்து பசிக்குச் சாப்பிடுங்கள். ஏப்பம் வந்தால் அத்துடன்
நிறுத்தலாம். எப்படி சாப்பிடுவது என்று
அறிந்து சாப்பிட்டால் உணவுக் கட்டுப்பாடின்றி எதையும்
சாப்பிடலாம்.
16. தண்ணீர் சுத்தமாக
இருந்தால், தண்ணீரைக் கொதிக்க வைத்தோ, வடிகட்டியோ
குடிக்கக் கூடாது. தண்ணீரை மண்
பானையில் ஊற்றி வைத்துக் குடிக்கலாம்
.
17. பசி வந்து
சாப்பிட வேண்டும், தாகம் வந்து தண்ணீர்
அருந்த வேண்டும், சோர்வு வந்து ஓய்வு
எடுக்க வேண்டும், தூக்கம் வந்து தூங்க
வேண்டும்.
18. காலையில் பல்
துலக்குவதை விட இரவில் கட்டாயம்
பல் துலக்கி படுக்கைக்கு செல்லவேண்டும்.
19. இரவு படுக்கைக்கு
நேரத்தில் சென்று விடியற்காலை எழுந்து
குளிக்கும் பழக்கத்தை வைத்துக்கொள்ள வேண்டும். காலை நேரத்தில்தான் பித்தம்
உடலில் பரவும், அப்போது குளிப்பது
உடம்பிற்கு நல்லது.
20. தூங்கத் தயாராவதற்கு
முன் மனதைப் பாதிக்கும் பேச்சு,
அதிர்ந்த சிந்தனைகள், செயல்பாடுகள் போன்றவை இல்லாமல அமைதியான
சூழ்நிலையில் இருந்து படுக்கைக்கு சென்றால்
தூக்கம் நன்றாக வரும்.
21. படுக்கையில், தலைமாட்டில்
செல்போன் போன்ற கதிர்வீச்சுக்கள் உள்ளவற்றை வைத்துக்கொள்ளாமல்,
வேறு அறையில் அல்லது தூரத்தில்
வைத்துவிட வேண்டும்.
22. உணவு, உறக்கம்,
உழைப்பு, ஓய்வு, உடற்பயிற்சி, உறவு
ஆகியவை சரியாக வைத்திருப்பதே உடல்நலத்திற்கு
மிக முக்கிய காரணியாகும்.
23. காலையில் வெறும்
வயிற்றில் தண்ணீர் அருந்தி ஒவ்வொரு
நாளையும் ஆரம்பிக்கவும், தண்ணீர் குடித்து நாளை
முடிக்கவும்.
24. டி,காபி
போன்றவற்றை தவிர்த்து /குறைத்து அதற்கு பதில் சத்துமாவு
கஞ்சி, சூப் போன்றவைகளை அருந்தலாம்.
25. நாற்பது வயதிற்கு
மேல் சைவ உணவை உண்டு,
அசைவ உணவை குறைத்துக்கொள்வது நல்லது.
26. தலைவலி, உடல்வலி
என்று எதெற்கெடுத்தாலும் ஒரு மாத்திரையை போட்டுக்கொள்வது
நல்லதல்ல. எண்ணைக் குளியல், கஷாயம்
போன்ற இயற்கை மருத்துவ முறையைப்
பின்பற்றுவது நல்லது.
27. கோபம், எதிர்ப்பார்ப்பு,
துக்கம், ஏமாற்றம், தோல்வி, அவமானம் போன்ற
உணர்ச்சிகள் உடல் நலத்தை மிகவும்
பாதிக்க வல்லது. இவைகளை போக்கும்
வழிமுறைகளை அறிந்து, நல்ல நூல்கள் , நண்பர்கள்,
மருத்துவர்கள் உதவியுடன் உணர்ச்சிகளை குறைத்து அதில் மூழ்கிவிடாமல் வாழ்வது
நலம்.
29. எதிர்காலத்தை நோக்கி
திட்டமிட்டு இறந்தகாலத்தை இழந்து விடாமல், ஒவ்வொருநொடியும்
ரசித்து வாழ்தல், சிரித்த முகத்துடன் இருத்தல்,
நேர்மையான சிந்தனையை கொண்டிருத்தல், உள்ளொன்று வைத்து புறம் பேசாமல்
இருத்தல், குழந்தைத் தன்மையை கடைபிடித்தல், இறுக்கமாக
இல்லாமல் வெளிப்படையாக இலகுவாக இருத்தல், எண்ணம்-சொல்-செயல்-எழுத்து-வாழ்க்கை ஆகியவற்றில் முரண்பாடு இல்லாமல் இருத்தல் போன்றவை நலம்.
30. ஆண்டிற்கு சிலமுறை
தினம் செய்யும் வேளைகளில் இருந்து விடுபட்டு பிடித்த
இடத்திற்கு, பிடித்த நண்பர்களுடன், குடும்பத்துடன்,
உறவினர்களுடன் சுற்றுலா செல்லுதல் மனதை மகிழ்ச்சிப் படுத்தும்.