Thursday, March 19, 2015

அருள்மிகு கோதண்டராம சுவாமி திருக்கோயில் பட்டீஸ்வரம்


God of Temple : Kothandaramar
Other God of Temple : Sithai

Darshan Time
6.00  am  to  10.00 am 
5.00  pm  to  8.00 pm 

ContactInfo
Sri Kothandarama swamy temple, Patteeswaram-612703
Phone : 0435-2416976 


Tamil Version
அருள்மிகு கோதண்டராம சுவாமி திருக்கோயில் பட்டீஸ்வரம் தல வரலாறு
ராமாயணம் எல்லோருக்கும் தெரியும். மகாவிஷ்ணுவின் அவதாரம்தான் ராமபிரான். க்ஷத்திரிய குலத்தில் அவதரித்து, ஒரு மானிடன் சராசரியாக அனுபவிக்க வேண்டிய இன்னல்கள் அனைத்தையும் அனுபவித்து மிகச் சாதாரணமான எளிய வாழ்க்கை வாழ்ந்தவர் ராமபிரான். இறை அவதாரமான அவர் நினைத்திருந்தால் எப்போதோ ராவணனை சம்ஹாரம் செய்து, சீதாதேவியை மீட்டிருக்க முடியும். என்றாலும், சராசரி மனிதனுக்கு உண்டான உணர்ச்சி நிலையிலேயே இவர் வாழ்ந்து வந்தார். இதனால் தான் ராவண சம்ஹாரமும் சிறிது காலம் எடுத்துக் கொண்டது. தன் தேவியான சீதாவைக் கவர்ந்து கொண்டு சென்ற காரணத்தால் ராவணனை அழிக்க பெரும்படையுடன் இலங்கை புறப்படுகிறார் ராமபிரான். சமாதானம் சரிவர அமையாததால், யுத்தம் நிகழ்கிறது. போரின் முடிவில் மாபெரும் பிராமணனான - வீரனான சர்வ கலைகளிலும் சிறந்து விளங்கியவனுமான ராவணன், ராமபிரானால் கொல்லப்படுகிறான். சிவபக்தனான ராவணனைக் கொன்றதால், தோஷங்கள் ராமபிரானைப் பற்றிக் கொள்கின்றன. இந்த அவதாரத்தில் ராமன், ஒரு மனிதன். அதனால் அவருக்கும் தோஷங்கள் பற்றிக் கொள்கிறது. சிறந்த பிராமணனான ராவணனைக் கொன்றதால் பிரம்மஹத்தி தோஷமும், போர்முனையில் எதிரிகளை வீழ்த்தும் வீரனான ராவணனைக் கொன்றதால் வீரஹத்தி தோஷமும், எண்ணற்ற கலைகளில் சிறந்து விளங்கியவன் ஆதலால் சாயஹத்தி தோஷமும் பற்றிக் கொள்கிறது. ஆக மூன்று தோஷங்கள் ராமனைப் பற்றிக் கொள்கிறது.
முதல் தோஷமான பிரம்மஹத்தி தோஷம் தன்னை விட்டு அகல, ராமேஸ்வரத்தில் ஒரு லிங்கம் ஸ்தாபித்து பூஜைகள் நடத்தினார். அங்கு ஒரு தீர்த்தம் உருவாக்கி லிங்கத் திருமேனியை அபிஷேகித்து வந்ததால் பிரம்மஹத்தி தோஷம் அகன்றது. இரண்டாவதான வீரஹத்தி தோஷம் நீங்க வேதாரண்யம் சென்றார். வேதங்கள் வழிபட்ட வேதாரண்யம் சமுத்திரத்தில் ஸ்நானம் செய்தார். ஒரு லிங்கம் ஸ்தாபித்து அனுதினமும் வழிபட்டு வீரஹத்தி தோஷத்தைப் போக்கினார். மூன்றாவது தோஷமான சாயஹத்தி தோஷம் அகல்வதற்கு ராமபிரான் வந்த திருத்தலம் தான் இந்த பட்டீஸ்வரம். அரசலாற்றின் தென்கரையில் அமைந்துள்ள சூரிய சோம கமல புஷ்கரணி கரையில் அமர்ந்து தியானம் செய்தார். ஒரு லிங்கம் ஸ்தாபித்து வழிபட்டார். தன் அம்பு முனையால் நிலத்தைக் கீறி ஒரு தீர்த்தம் உருவாக்கினார். அதில் இருந்து தீர்த்தம் எடுத்து லிங்கத் திருமேனிக்கு அபிஷேகம் செய்து வழிபட அவருக்கு இருந்த சாயஹத்தி தோஷமும் நீங்கியது. தேவர்களும், முனிவர்களும் ராமபிரான் மேல் மலர்களைப் பொழிந்து வணங்கினர். சர்வதோஷங்களும் ராமபிரானை விட்டு அகன்றன. ரிஷிகள் தங்களது பத்தினிகளுடன் வந்து ராமனைப் போற்றித் துதிக்கின்றனர்.
தலச் சிறப்பு
ஞானசம்பந்தருக்காக அமைந்த ஆனி மாத முத்துப் பந்தல் உத்ஸசம் பட்டீஸ்வரம் தேனுபுரீஸ்வரர் ஆலயத்தில் விமரிசையாக நடைபெறுகிறது. அப்போது இந்த கோதண்டராம சுவாமி ஆலயத்துக்கு வரும் திருஞானசம்பந்தருக்கு, கோதண்டராமருக்கு சாத்திய பட்டு வஸ்திரத்தை அணிவிப்பார்கள். இந்த மரியாதை நிகழ்வு இன்றும் நடைபெற்று வருகிறது.
பட்டு நெசவுத் தொழிலில் ஈடுபடுபவர்கள் இங்குள்ள கோதண்டராமரை வழிபடுகின்றனர்.

தரிசன நேரம்
காலை  6.00  முதல்  10.00 காலை
மாலை  5.00  முதல்  8.00 இரவு 
மூலவர் :கோதண்டராமர்
ஏனைய கடவுள்கள் : சீதை
தொடர்புக்கு
அருள்மிகு கோதண்டராம சுவாமி திருக்கோயில் பட்டீஸ்வரம்-612 703- தமிழ்நாடு.

தொலைபேசி 
0435-2416976  




Tags :
Sri Kothandarama swamy temple, - Kumbakonam
Sri Kothandarama swamy temple,,temples in Kumbakonam,temples to visit in Kumbakonam,papular temples in Kumbakonam,famous temples in Kumbakonam.
Sri Kothandarama swamy temple,,Kumbakonam temples list,Kumbakonam temples details,temples in  Kumbakonam,Kumbakonam temples details,temples to visit in Kumbakonam,papular temples in Kumbakonam,famous temples palces in Kumbakonam,temples place arround Kumbakonam,temples places near Kumbakonam,temple map in Kumbakonam,temples locations in Kumbakonam


No comments:

Post a Comment